search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக சட்டப்பேரவை"

    சேலத்தில் 2-வது நாளாக தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

    சேலம்:

    தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ தலைமையில் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அருள், அன்பழகன், ஈஸ்வரன், எழிலரசன், செந்தில்குமார், பாலசுப்ரமணியம், முகமது ஷாநவாஸ், செல்லூர் ராஜூ ஆகியோர் சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இன்று 2-வது நாளாக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளையும், உயிரினங்களையும் பார்வை–யிட்டனர்.

    பின்பு வன குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் பழைய பேருந்து நிலையம் கட்டிடம் மற்றும் வணிக வளாகம், கார் பார்க்கிங் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    எருமாபாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டனர். சேலம் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு பின்னர் கலெக்டர் அலுவ–லகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் சிவகுமரன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மண்டல குழு தலைவர்கள் கலையமுதன், உமாராணி, அசோக் டெக்ஸ் அசோகன், தனசேகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×